ஹோம் /Namakkal /

Namakkal : நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 21) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இவைதான்!

Namakkal : நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூன் 21) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இவைதான்!

நாமக்கல்

நாமக்கல் - மின் தடை அறிவிப்பு

Namakkal District : நாமக்கல் மாவட்டத்தின் காளப்ப நாயக்கன்பட்டி, இளநகர், திருச்செங்கோடு துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன..

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜூன் 21ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு  பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி காளப்ப நாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை - ஜூன் 21ம் தேதியன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம் புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல் மற்றும் துத்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல் இளநகர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செட்டிபாளையம், எளையம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை மற்றும் மாணிக்கம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  மேலும் திருச்செங்கோடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருச்செங்கோடு, கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயணம்பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, ஆண்டிபாளையம், தோக்கவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம்பாளையம், சிந்தம்பாளையம், கைலாசம்பாளையம், திருமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Arun
  First published:

  Tags: Namakkal, Power cut