Home /namakkal /

மாத்திரை, மருந்துகள் இல்லாத வாழ்வு முறை‌... வழிகாட்டும் அரசு மருத்துவமனை

மாத்திரை, மருந்துகள் இல்லாத வாழ்வு முறை‌... வழிகாட்டும் அரசு மருத்துவமனை

உடல்

உடல் மற்றும் மன பிரச்சனைகளை யோக மற்றும் இயற்கை மருத்துவ மூலம் தீர்க்கலாம்

உடல் மற்றும் மன பிரச்சனைகளை யோக மற்றும் இயற்கை மருத்துவ மூலம் தீர்க்கலாம்- விளக்கம் தருகிறார் மருத்துவர் வெங்கடேஷ்

    தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளுக்கு நல்ல வரவேற்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடையே உடல்சார்ந்த மருத்துவத்தோடு யோகா பயிற்சிகளையும் அதிக அளவில் கற்று கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதை எவ்வளவு பேர் முழுமையாக பின்பற்றுகிறோம் என்பது கேள்வி குறி தான்?? யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மருத்துவர் வெங்கடேஷ் இதுகுறித்து முழுமையான தெரிவித்துள்ளார். அதை முழுமையாக இங்கே காண்போம்.

    திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாழ்வியல் மையம் தொடங்கப்பட்டது. இதில்
    மக்களுக்கு ஆயில் மசாஜ், அக்குபஞ்சர், நீராவி குளியல், மண் குளியல் உள்ளிட்ட பல வகையான சிகிச்சை வழங்கப்படுகிறது. இயற்கை காய்கறிகளை உணவில் சேர்த்து கொண்டு மருந்தில்லா வாழ்க்கை வாழ்வது குறித்தும் மக்களுக்கு கருத்தாக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது இருக்கும் நவீன காலத்தில் இயற்கை சார்ந்த உணவுகளை எடுத்து கொள்வதில் மக்கள் விலகி சென்றுவிட்டனர். அதிகமான துரித உணவுகளை உண்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து உணர வேண்டும்.

    அக்காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய இயற்கை தானியங்களான கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் உள்ளிட்ட தானிய உணவுகளை உண்ண வேண்டும். இதுபோன்ற இயற்கை சார்ந்த மருத்துவங்களை நாடுவதற்கு இத்தகைய யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாழ்வியல் மையங்கள் பெரும் உதவியாகவும் இருக்கும்.

    மேலும் பழங்காலத்தில் மக்கள் மருந்தே உணவு என்ற வாழ்க்கையாக இருந்தனர். தற்போது சுவையான உணவு என்ற பெயரில் கலப்படம் கலந்த உணவுகளை உட்கொள்வதால் மக்களுக்கு ஏராளமான வியாதிகள் அதிகளவில் வருகிறது. இதனை தடுக்க ஒவ்வொருவரும் யோகா பயிற்சியை செய்யும் பழக்கத்தை தினமும் தங்கள் வாழ்வில் எடுத்து கொள்ள வேண்டும் என்கிறார்.

    யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மூலம் பக்கவாதம், மூட்டுவலி, கழுத்து வலி, உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, தோல் வியாதிகள், ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை, மன நல பிரச்னைகளுக்கு, எளிமையான ஆசன பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள்,உணவுக்கட்டுப்பாடு குறித்தும் பயிற்சியளிக்கப்படுகிறது.

    அதுமட்டுமின்றி தொற்று அல்லாத நோய்ப்பிரிவில், பிரஷர், சர்க்கரை, உடல் பருமன் உள்ளிட்ட நோய்களுக்கு எளிய யோகா, மூச்சு பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கருமுட்டை பாதிப்பு, கருப்பையில் நீர் கோர்த்துக்கொள்ளுதல் குறித்து யோகா மற்றும் மூச்சு பயிற்சி மூலம் சரி செய்யப்பட முடியும் என்கிறார்.

    ஆகையால் இது ஒரு மாத்திரை மருந்துகள் இல்லாத வாழ்வு முறை‌. இதனை சரியான முறையில் குறித்து காலகட்டத்திலும், வியாதிகள் தீவிர ‌நோயாக மாறுவதற்கு முன்பே எடுத்துக் கொண்டால் நிச்சயமாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் வெங்கடேஷ்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி