முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் மருந்து உற்பத்தியாளர்கள் சந்திப்பு விழா!

நாமக்கல்லில் மருந்து உற்பத்தியாளர்கள் சந்திப்பு விழா!

நாமக்கல்

நாமக்கல்

Namakkal news | நாமக்கல் கால்நடைமருத்துவக்கல்லூரி, மருந்தியல் மற்றும் நச்சியல் துறையின் சார்பில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் கால்நடைமருத்துவக்கல்லூரி, மருந்தியல் மற்றும் நச்சியல் துறையின் சார்பில், இறுதியாண்டு பி.விஎஸ்சி மற்றும் எம்.விஎஸ்சி படிக்கும் மாணவர்கள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.

துறைத் தலைவர் ஜெகதீஸ்வரன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் செல்வராஜு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறையில் முதல் இரண்டு மதிப்பெண்கள் மற்றும் மருந்தியல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

பேராசிரியர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பில் மொத்தம் 16 கால்நடை மற்றும் கோழி மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களுடைய மருந்து பொருட்களை காட்சிக்கு வைத்து, அவற்றின் பயன்கள் குறித்தும் விளக்கி கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் இறுதியாண்டு இளங்களை மற்றும் முதுகலை மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில் உதவி பேராசிரியர் மேகலா நன்றி கூறனார்.

First published:

Tags: Local News, Namakkal