முகப்பு /நாமக்கல் /

தமிழ்நாடு மூலிகை பொருள் தயாரிப்பு நிறுவனத்துக்கு கொல்லிமலையிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மிளகு..!

தமிழ்நாடு மூலிகை பொருள் தயாரிப்பு நிறுவனத்துக்கு கொல்லிமலையிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மிளகு..!

 மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்

மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்

namakkal kollimalai sales | கொல்லிமலையிலிருந்து 3 நிறுவனங்களுக்கு ரூ.33.60 இலட்சம் மதிப்புள்ள 6 டன் மிளகு விற்பனை செய்யப்படுகிறது.

  • Last Updated :
  • Namakkal, India

இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து உற்பத்தி நிலையம் (IMPCOPS) மற்றும் பண்டகசாலைக்கு முதல் முறையாக கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1 டன் மிளகு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடப்பு மாதத்தில், தமிழ்நாடு மூலிகை பொருள் தயாரிப்பு நிறுவனம் (TAMPCOL), கூட்டு கொள்முதல் குழு (JPC) மற்றும் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து உற்பத்தி நிலையம் மற்றும் பண்டகசாலை ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.33.60 இலட்சம் மதிப்புள்ள 6 டன் மிளகு விற்பனை செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா அவர்கள் (25.04.2023) கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கம் மலைவாழ் மக்களின் நலனிற்காக தொடங்கப்பட்டு 19.02.1977 முதல் 3 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. மேலும் சங்கத்தின் முக்கிய நோக்கங்களின் ஒன்றான மலைவாழ் மக்கள் உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் மிளகு, காப்பி போன்ற வேளாண் விளை பொருட்களை பதனிடுதல் பணி மேற்கொண்டு அதனை விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு விற்றுத் தருதல் ஆகும்.

கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் மலைவாழ் மக்கள் உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் மிளகு, காப்பி போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களை முதற்கட்ட பணியாக காப்பி தோல் நீக்கும் இயந்திரம் பதனிடும் பணிகளை செய்தும், மிளகு பதப்படுத்தி சுத்தம் செய்து மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றித்தரும் பணிகளை தற்போது செய்து வருகிறது.

மேலும் பதனிடும் மிளகினை உலர வைத்து அதனை உறுப்பினர்களிடம் நல்ல விலைக்கு கொள்முதல் செய்து அதனை சென்னை மத்திய கூட்டுக் கொள்முதல் கூட்டம் மற்றும் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமும் விற்பனை செய்து வருகிறது. இக்கொல்லிமலை பகுதியில் மிளகு பயிரிடப்படும் பரப்பளவு சுமார் 1200 ஹெக்டேர் இதில் விளைவிக்கப்படும் மிளகின் அளவு சுமார் 850 மெ.டன் ஆகும்.

கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மலைவாழ் மக்களின் வேளாண் உற்பத்தி பொருட்கள் மிளகு, காப்பி போன்றவற்றை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து பதனிடும் ஆலையின் மூலம் பதப்படுத்தி அதனை கூட்டுக் கொள்முதல் குழு JPC சென்னை மூலமும் தமிழ்நாடு மூலிகை பொருள் தயாரிப்பு நிறுவனம் (TAMPCOL) மூலம் இதுவரை 12 டன் மிளகு கொள்முதல் செய்து ரூ.54.00 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது. தொடர்ந்து மாதமாதம் விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க | கருப்புசாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட பிரமாண்ட அரிவாள்.. அடேங்கப்பா 1000 கிலோ எடையா?

அந்த வகையில் இன்றைய தினம் கொல்லிமலை லேம்ப் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட மிளகானது கொல்லிமலை லேம்ப் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், ரூ.5.60 இலட்சம் மதிப்புள்ள ஒரு டன் மிளகு IMPCOPS கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும். 16.80 இலட்சம் மதிப்புள்ள 3 டன் மிளகு தமிழ்நாடு மூலிகை பொருள் தயாரிப்பு நிறுவனம் (TAMPCOL) நிறுவனத்திற்கும் மற்றும் 11.20 இலட்சம் மதிப்புள்ள 2 டன் மிளகு கூட்டு கொள்முதல் குழுவிற்கும் (JPC) என ஆக மொத்தம் ரூ.33.60 இலட்சம் மதிப்புள்ள 6 டன் மிளகு அனுப்பப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா.பி.சிங் இ.ப.ஆ., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ரூ.5.60 இலட்சம் மதிப்புள்ள ஒரு டன் மிளகு இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து உற்பத்தி நிலையம் (IMPCOPS) கூட்டுறவு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்ச்சியில் இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் திரு.த.செல்வக்குமரன், சரக துணைப்பதிவாளர் திரு.ப்பி.கர்ணன், இணைப்பதிவாளரின் நேர்முக உதவியாளர் திரு.உ.ரா.குண்டன் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal