ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்..!

நாமக்கல்லில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்..!

கிராம மக்கள் போராட்டம்

கிராம மக்கள் போராட்டம்

Namakkal | நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கொத்தம்பாளையத்தில்  கடந்த இரண்டு மாதமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கொத்தம்பாளையத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியின் அருகில் திருமணிமுத்தாறு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், பாலம் அமைக்கும் பணிகள் செய்யும்போது குடிநீர் குழாய்கள் அவ்வப்போது உடைவது தொடர் கதையாக இருந்துள்ளது. இதனால் இப்பகுதியில் வரக்கூடிய காவிரி குடிநீர் குழாய் மற்றும் அனைத்து குழாய்களும் உடைந்த வண்ணமாக உள்ளது.

  மேலும் பல மாதங்களாக குடிநீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் விவசாய தோட்டங்களில் சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : மாவட்ட அளவிலான தடகள போட்டி - நாளை மறுநாள் நாமக்கல்லில் தொடக்கம்

  உரிய நேரத்தில் வெளியூர் வேலைக்கு செல்ல முடியாமல் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் குடிநீர் குடிப்பதற்காக பல மணி நேரம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட பாலம் வேலை செய்யும் அதிகாரிகளிடம் மற்றும் அரசு நிர்வாகத்திடம் முறையிட்டு எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் தலைமையில் ஊர் பொதுமக்கள் கொத்தம்பாளையத்தில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்டோர் நேரில் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சனை விரைவில் சரி செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடபட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர்: மதன்குமார்.S

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Namakkal