முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி...

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி...

X
நாமக்கல்

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குளத்தில் 

Namakkal News | நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் நகர் பகுதியில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டியில் நகராட்சி சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது.  2015 - 2020 ஆண்டுகளில் புணரமைக்கப்பட்டு குளத்தை சுற்றியும் பாதை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த குளத்தில் கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன் வகைகளும் வாத்துகள் ஆகியவை நகராட்சி சார்பில் குளத்தில் விடப்பட்டது.

இந்நிலையில் கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, கே கே நகர், முல்லை நகர், சிங்கிலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த குளத்தில் கலப்பதால் குளத்தில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மீன்கள் இறந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் குளத்தில் அருகே வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் இந்த குளத்தை புணரமைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நகராட்சி சார்பில் சுமார் ரூ.67.20 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணி இந்தாண்டு மே மாதம் பணி முடிவடைய உள்ளதாக நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குளம் புணரமைக்க எவ்வித பணிகளும் தற்போது வரை தொடங்கவில்லை எனவும் புணரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் கழிவு நீர் குளத்தில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Namakkal