ஹோம் /நாமக்கல் /

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்

X
ஆட்சியரிடம்

ஆட்சியரிடம் மனு

Namakkal | நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி ஊர்மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குமாரபாளையம், பாப்பிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம் மற்றும் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.

இவ்வாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர், ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு தற்போது வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், சேந்தமங்கலம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆண்டு தோறும் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது.

கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. இவ்வாண்டாவது சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

First published:

Tags: Local News, Namakkal