ஹோம் /நாமக்கல் /

பறவை காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை - நாமக்கல் ஆட்சியர் தகவல்

பறவை காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை - நாமக்கல் ஆட்சியர் தகவல்

நாமக்கல் ஆட்சியர் தகவல்

நாமக்கல் ஆட்சியர் தகவல்

Namakkal District News | கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துளளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் இறந்தன. அவற்றின் மாதிரிகளை சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வில், பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவிய பகுதியானது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கே நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து தினமும் 1 கோடி கோழி முட்டைகள் மற்றும் கோழிகள் அனுப்பப் பட்டு வருகின்றன. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில், நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Must Read : மேட்டுப்பாளையம் ரயில் நிலையம், தூரி பாலத்தில் ஷூட்டிங் நடத்தி ஹிட்டான படங்களின் லிஸ்ட்!

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளுக்கு வரும் வாகனங்களுக்கும், வெளியில் செல்லும்வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணையைச் சுற்றியுள்ள குப்பை, கோழிக் கழிவு அகற்றப்பட்டு, பயோ செக்யூரிட்டி பாதுகாப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பண்ணைகளுக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும், மாவட்டம் முழுவதும் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Bird flu, Local News, Namakkal