Home /namakkal /

காவிரி ஆற்றில் வெள்ளம் செல்வதைக் காண குவிந்த மக்கள்- போக்குவரத்து பாதிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளம் செல்வதைக் காண குவிந்த மக்கள்- போக்குவரத்து பாதிப்பு

செல்பி எடுக்க குவிந்த பொதுமக்கள்

செல்பி எடுக்க குவிந்த பொதுமக்கள்

நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்க்கவும் செல்ஃபி எடுக்கவும் மக்கள் குவிந்ததால் சாலையில் நெரிசல் ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்க்கவும் செல்ஃபி எடுக்கவும் மக்கள் குவிந்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதித்துள்ளது.

    குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் குறையாமல் இருப்பதால் அங்கிருந்து மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்து தொடர்ந்து முகாமில் மக்கள் தங்கியுள்ளனர்.

    மேட்டூர் அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது.
    இதனால் குமாரபாளையம், பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை, பரமத்தி வேலூர் பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீர் கரைகளை தாண்டி சென்றதால் வீடுகளுக்கு புகுந்த வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் செல்வதைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பவானி பகுதியை இணைக்கும் பாலம் மற்றும் பள்ளிபாளையத்தையும், கருங்கல்பாளையம் இணைக்கும் பாலம், கொக்கராயன் பேட்டை, பரமத்தி வேலூர் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் காவல்துறையினர் எச்சரிக்கையையும் மீறி மக்கள் காவிரி ஆற்றில் உள்ள வெள்ளப்பெருக்கை காண்பதற்காக குடும்பத்தினருடன் திரண்டனர்.

    மேலும் தங்கள் செல்போன்கள் மூலம் செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்து வருகின்றனர். ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் செல்லும் ஆபத்தை உணராமல் மக்கள் திரண்டதால் பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி