முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் பட்டணம் பள்ளத்து கருப்பனார் கோவில் திருவிழா கோலாகலம்..

நாமக்கல் பட்டணம் பள்ளத்து கருப்பனார் கோவில் திருவிழா கோலாகலம்..

X
நாமக்கல்

நாமக்கல் பட்டணம் பள்ளத்து கருப்பனார் கோவில் திருவிழா

Pattanam Pallattu Karuppanar Temple Festival | ராசிபுரம் அருகே பட்டணம் பள்ளத்து கருப்பனார் கோவில் திருவிழா 4 ஆண்டுகளுக்கு பின் விமர்சியாக நடைபெற்ற கோவில் திருவிழா. இவ்விழாவிற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியில் பள்ளத்து கருப்பனார் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். இக்கோவிலுக்கு மிகவும் பழமையான வரலாறு உண்டு. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், விவசாய பெருங்குடி மக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வர மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்தனர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியில் பள்ளத்து கருப்பனார் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம்.இக்கோவிலுக்கு மிகவும் பழமையான வரலாறு உண்டு. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், விவசாய பெருங்குடி மக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வர மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்தனர் அந்த வகையில் பட்டணம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ,விழுப்புரம் மாவட்டம் பசும்பாலிகானி பகுதிக்கு மாட்டு வண்டியில் சென்று பொருட்களை ஏற்றி வந்துள்ளார்.

நாமக்கல் பட்டணம் பள்ளத்து கருப்பனார் கோவில் திருவிழா

அப்போது ஒரு இடத்தில் வாகனத்தில் போதிய அளவிலான பாரம் இல்லாத காரணத்தினால் அருகில் இருந்த கற்களை எடுத்து மாட்டு வண்டியில் வைத்து வந்ததாகவும் அது தேவைப்படாத போது வெகு தொலைவு வந்து, அந்த கற்களை தூக்கி எறிந்து வீசியுள்ளார்.

ஆனால் மீண்டும் பார்த்தபோது மாட்டு வண்டியில் அந்த கல் இருந்துள்ளது.

இதையும் படிங்க : மதுரையை அழகாக்கும் குழந்தைகள்.. வைரலாகும் சித்திரை திருவிழா புகைப்படங்கள்

மறுபடியும் அந்த கல்லை மீண்டும் தூக்கி எறிந்த பிறகும், மீண்டும் மீண்டும் மாட்டு வண்டிக்கே வந்துள்ளது.அதன்பிறகு , பட்டணம் அருகே உள்ள ஒரு புதர் பகுதியில் கல்லை தூக்கி எறிந்து விட்டு அந்த மாட்டு வண்டி ஓட்டி வந்துள்ளார்..மீண்டும் அந்த கல் அவரது வண்டிக்கு வராமல் அந்த புதருக்குள்ளேயே விழுந்ததாகவும் அவரது கனவில் வந்து நான் தான் கருப்பனார் எனவும் என்னை முறைப்படி பூஜை செய்து வழிபட வேண்டும் என கூறியதையடுத்து, விவசாயிகள் அந்த பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி பள்ளத்திலிருந்து கற்களை எடுத்து வந்து, அதற்கு கருப்பனார் என பெயர் வைத்து வழிபட்டுள்ளனர்.

பின்னர் காலப்போக்கில் அது பள்ளத்து கருப்பனார் என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு என்று கட்டிடங்கள் கிடையாது, கோவிலை சுற்றி மணிகளும் வேல் கம்புகளும் பக்தர்கள் வேண்டுதலுக்காக வைப்பது வழக்கம் இந்த கோவிலின் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை மாதத்தில் அம்மாவாசை முடிந்து அடுத்து வரும் வாரத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

கடந்த 2 திருவிழாக்கள் கொண்டாட முடியாமல் கொரோனா தொற்று காரணத்தினால் திருவிழா நடைபெறவில்லை. தற்போது 2019க்கு பிறகு கருப்பனார் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலில் கருவறை,கட்டிடம் எனவும் தனித்தனியாக இல்லை மரத்தடியில் வேல் கம்புகளோடு மணிகளோடு தரைத்தளத்தில் அமைந்திருக்கும் பள்ளத்து கருப்பனாருக்கு திருவிழாவின் போது மட்டும் தான் மணி அடித்து பக்தர்களுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கம்.

மற்ற விசேஷ நாட்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மலர்கள் தூவப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பக்தர்களே சூடம் பத்தி ஏற்றி வழிபாடு செய்து விட்டு, சென்று விடுவார்கள் மேலும் திருவிழாவின் போது மட்டும்தான் கோவில் வளாகத்தின் பகுதியில் கிடா வெட்டுவது வழக்கம், மற்ற இடைப்பட்ட நாட்களில் கிடா வெட்டுவது கிடையாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த திருவிழாவிற்காக கோவை,சென்னை ஈரோடு,சேலம் நாமக்கல்,வேலூர்,கரூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி பள்ளத்து கருப்பனார் அருளை பெற்று சென்று வருகின்றனர். தற்போது பக்தர் ஒருவர் தனது வேண்டுதலுக்காக ஒரு டன் எடை, 21 அடி உயர அருவாளைக் கோவிலில் வைத்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Namakkal