முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் லாரிகள் நிறுத்துவதற்கு பார்க்கிங் யார்டு.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

நாமக்கல்லில் லாரிகள் நிறுத்துவதற்கு பார்க்கிங் யார்டு.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal News : நாமக்கல்லில் லாரிகள் நிறுத்துவதற்கு பார்க்கிங் யார்டு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் லாரிகள் நிறுத்துவதற்கு பார்க்கிங் யார்டு அமைக்க வேண்டும் என்றும், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஒய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க வேண்டும் என்றும், நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் சட்டசபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பேசும்போது கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், 'தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மினி பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க நகர்ப்புறங்களில் சி.என்.ஜி அல்லது சி.பி.ஜி.கேஸ் மூலம் வாகனங்களை இயக்க வேண்டும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,போக்குவரத்து தொழிலாளர்களான, டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் உடல் நிலையையும், பயணிகளின் பாதுகாப்பை கருதியும் கருத்தில் கொண்டு அவர்கள் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் மூலம் அதிக தூரம் பயணிக்கும் வகையில் நவீன சொகுசு பஸ்களை இயக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், 'தமிழகத்தில் சுமார் 6.50 லட்சம் கனரக வாகனங்கள் உள்ளன. எனவே லாரி உரிமையாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்க வேண்டும். லாரிகளுக்கு ஆன்லைன் அபராதம் விதிக்கும்போது, வாகனங்களை நிறுத்தி சோதனை அறிக்கை வழங்கி அபராதம் விதிக்க வேண்டும். நாமக்கல்லில் பிரதானமாக லாரி தொழில் உள்ளதால் நாமக்கல் பகுதியில் லாரிகளை நிறுத்தி வைப்பதற்கு பார்க்கிங் யார்டு தேவைப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய விமானப்படையில் சேர அரிய வாய்ப்பு.. திண்டுக்கல் இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!

இதற்காக, 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்ததற்கான கருத்துரையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உரிய துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசின் மூலம் வெளியிட்டுள்ள ஒன் இந்தியா, ஒன் பர்மிட் மூலம் பெற்ற ஆல் இந்தியா பர்மிட் பதிவு பெற்ற தனியார் பஸ்கள் அந்த மாநிலத்திற்கு உரிய வரியை செலுத்தியும், ஆத்தரைசேஷன் ஃபீஸ் செலுத்திய பின்பு அந்த பஸ்சை இயக்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்றார்.

அத்துடன், 'நாமக்கல் நகரில், சேலம்,திருச்செங்கோடு, பரமத்தி, திருச்சி, மோகனூர் மற்றும் துறையூர் ரோடுகளில் உள்ள மாநில நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் மின்கம்பம் அமைத்து இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கபோக்குவரத்து மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ், அல்லது நகராட்சி நிதியின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி நாமக்கல் உழவர் சந்தையின் தரைத்தளத்தை உயர்த்தி வடிகால் வசதி ஏற்படுத்திடவும், கூடுதல் கடைகளை அமைத்திடவேண்டும்.

இதையும் படிங்க : மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது!

மோகனூர் அசல தீபேஸ்வரர் ஆலயத்தை புனரமைத்து கும்பாபிசேக விழா நடத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் பெயரை நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என பெயர் மாற்றம் செய்து நாமக்கல்லில் தலைமை மத்திய கூட்டுறவு வங்கியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகனூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டும். நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் கரூர் மாவட்டம் நெரூர் இடையே கதவணை அமைக்கும் திட்டத்திற்கு கடந்த நிதியாண்டு நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை இந்த ஆண்டு உடனடியாக தொடங்க வேண்டும்,

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    நாமக்கல்லில் உள்ள சித்தர் மலைக்கு சாலை வசதி, மின்சார வசதி, பூங்காக்கள் அமைத்து தர வேண்டும். நாமக்கல் அரசு கால்நடை கல்லூரி தொடங்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு ஒரு கலையரங்கம் அமைத்து தர வேண்டும்' என்று பேசினார்.

    First published:

    Tags: Local News, Namakkal