முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்.. மாணவர்களுடன் கலந்துகொண்ட பெற்றோர்கள்..

நாமக்கல்லில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்.. மாணவர்களுடன் கலந்துகொண்ட பெற்றோர்கள்..

X
கற்றலை

கற்றலை கொண்டாடிய நாமக்கல் மாணவர்கள்

Namakkal News | நாமக்கல் மாவட்டம் சந்தப்பேட்டை புதூரில் அமைந்திருக்கும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Namakkal, India

கொரோனா காலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை போக்க எண்ணும் எழுத்தும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. அதன்படி அடிப்படை கல்வியை சிறப்பாக பயின்று, பயின்றதை அழகாக பாடல்கள் மூலமாகவும் ஆடல் மூலமாகவும் குழந்தைகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாமக்கல் சந்தப்பேட்டை புதூரில் அமைந்திருக்கும் அர்த்தனாரி அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. எண்ணும் எழுத்தும் திட்டம் 2025ம் ஆண்டுக்குள் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கல்வி அறிவும், எண் கணித திறன் அடைவதே நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயின்ற முதல் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் லதா வழிகாட்டுதலுடன் “உலகம் போகலாம். நீல வானிலே” மற்றும் “வண்ணம் தொட்டு வண்ணம் தொட்டு” ஆகிய 2 தமிழ் பாடலையும் லேடிஸ் ஃபிங்கர் என்னும் ஆங்கில பாடலையும் சிறுவர்களின் விரல் அசைவுகளுடன் குரல் கொடுத்து பாடி ஆடினர். தொடர்ந்து, 2ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் காடுகளில் வசிக்கும் மிருகங்களை போல் பாவனைகள் செய்தனர்.

இதையும் படிங்க : கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் இறுதி அஞ்சலி... 

திருக்குறள், கணக்கு பாடங்கள் மற்றும் எழுத்து வடிவிலான சிறிய எண்கள் முதல் பெரிய எண்கள் வரை அனைத்தையும் பாடல்களாக பாடி அசத்தினர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்களும் ஆர்வத்துடன் வந்திருந்த தங்கள் குழந்தைகளின் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

First published:

Tags: Local News, Namakkal