Home /namakkal /

பள்ளிபாளையம் அருகே காவிரி தரைப் பாலத்தில் எட்டிப்பார்க்கும் கம்பிகள்.. விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்..

பள்ளிபாளையம் அருகே காவிரி தரைப் பாலத்தில் எட்டிப்பார்க்கும் கம்பிகள்.. விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்..

Namakkal

Namakkal

Namakkal Distrcit: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காவிரி RS தரைப் பாலம் குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காவிரி RS தரைப் பாலம் நுழைவு பகுதியில் குண்டு குழிகள் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    காவிரி RS தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது இங்கு போடப்பட்டுள்ள கான்க்ரீட் சாலையில் தரம் இல்லாதால் பெரிய பள்ளங்கள் மற்றும் குழிகள் ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை வரும்போது பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    மேலும் பாலத்தில் சில இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகளும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாலம் வளைவு பகுதியாக இருப்பதால் இருபுறமும் வரும் வாகனங்கள் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் குழிகளில் விட்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது பள்ளிபாளையம் சாலையில் சாலை விரிவாக்கம் பணிகள் மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வழியாக போக்குவரத்து தடைச் செய்யப்பட்டு காவிரி RS வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக சென்று வருகின்றது.

    மேம்பாலம் கட்டுமான பணிக்காக பள்ளிபாளையத்திலிருந்து ஆலாம்பாளையம் வரை, சாலைகள் தோண்டப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், திருச்செங்கோடு, ஈரோடு செல்லும் வாகனங்களும் காகித ஆலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. காவேரி பாலத்தின் சாலை சேதம் அதிகமாகி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் பஞ்சர் போடப்பட்டாலும் ஒரு சில நாட்கள் மட்டும் தாங்குகிறது. மீண்டும் அதேபோல் பள்ளங்கள் ஏற்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இங்கு சாலையை மீண்டும் பள்ளங்கள் ஏற்படாதவாறு சீரமைக்க வேண்டும். இல்லையெனில் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி