Home /namakkal /

முழு வீச்சில் நடக்கும் பள்ளிபாளையம் மேம்பால பணிகள்!

முழு வீச்சில் நடக்கும் பள்ளிபாளையம் மேம்பால பணிகள்!

முழு

முழு வீச்சில் நடக்கும் பள்ளிபாளையம் மேம்பால பணிகள்!

இங்கு மேம்பாலம்‌ கட்டுவதற்காக முதலில் பெரிய தூண்கள் அமைப்பதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு வந்தன.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து ஆலாம் பாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    திருச்செங்கோடு டூ ஈரோடு செல்லும் சாலையில் உள்ள பள்ளிபாளையம் வரை சாலை விரிவாக்கம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஆலாம்பாளையம் பேருந்து நிறுத்தம் வரை மேம்பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.இதனால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    இங்கு மேம்பாலம்‌ கட்டுவதற்காக முதலில் பெரிய தூண்கள் அமைப்பதற்கு வேலைகள் தொடங்கப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு வந்தன. தற்போது மேம்பாலம் கட்டுவதற்கான பெரிய தூண்கள் அமைக்கும் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்பாலம் ஆலாம்பாளையம் முதல் பள்ளிபாளையம் வரை சுமார் 3 கிலோமீட்டர் வரை 70க்கு மேற்பட்ட தூண்கள் கொண்டு அமைக்கப்பட உள்ளது. மேம்பால பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில் இதற்கான வேலைகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. மேம்பாலம் பணிகள் முடிவுக்கு வந்த பின்னர் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு‌ உள்ளது.

    இதனிடையே இவ்வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் வேலை செல்பவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு மினி டெம்போ ஒன்று இவ்வழியாக வந்துபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதன் காரணமாக நெடுஞ்சாலை துறையினர் மூன்று சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த வழியாக செல்லாமல் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனை வாகன ஓட்டிகள் சரியாக பின்பற்றி வேலை நடைபெறும் பகுதிகளில் அடிக்கடி சென்று இடையூறுகள் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேசமயம் மேம்பாலம் அமைக்கும் பணியால் வேலைக்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மேம்பால பணியை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி