நாமக்கல் நகரில் புராண சிறப்பு பெற்ற நாமகிரித்தாயார் உடனுரை நரசிம்மர் கோயில், ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் மற்றும் ஸ்ரீஅரங்கநாதர் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தின்போது தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த மாதம் தேர்த்திருவிழாவின்போது ஒரே நாளில் ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஅரங்கநாதர் ஆகிய முப்பெரும் தேரோட்டம் நடைபெற்று முடிந்தது.
ஏற்கனவே தேர்த்திருவிழாவின்போது குளக்கரையில் உள்ள நாமகிரித்தாயார் மண்டபத்தில் இருந்து சுமார் 10 நாட்கள் சுவாமி வாகனங்களில் வீதி உலா துவங்கும். அதற்காக ஏராளமான பக்தர்கள் குளக்கரையில் கூடுவார்கள். இதையொட்டி அங்கு சுமார் 1 மாதம் வரை தேர்க்கடைகள் அமைக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால், தேர்க்கடைகள் அமைக்கப்படவில்லை.
குறிப்பாக நாமக்கல் மெயின்ரோட்டில், பொதுமக்கள் தங்களது நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த ஏதுவாக பார்க்கிங் வசதிக்காக உபயோகப்படுத்தி வந்த, குளக்கரைத்திடலில், இந்த ஆண்டு தேர் திருவிழா முடிந்தபிறகு, தற்போது தேர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தனியார் ஒருவர் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தை, சுமார் 80 நாட்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுவந்து தேர் கடைகள் அமைத்துள்ளார். இந்த கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் விழாவில் கலந்துகொண்டு தேர் கடையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal