ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியிலே ஒரு மரக்கன்றாவது வைத்து அதனை முழுமையாக பராமரித்து வந்தால் நம்மால் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். தங்கள் வீட்டுகளில் இடத்திற்கு ஏற்ப மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க வேண்டும் என்ற நல்நோக்கத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அனைவரிடமும் மரம் வளர்ப்பதின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என்று நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் என நான்கு மாவட்டங்கள் ஒன்று சேர்த்து பள்ளி மாணவர்கள் முதல் ஊர் மக்கள் வரை அனைவருக்கும் தன்னார்வ அமைப்பினர் மூலம் வழங்கப்பட்டது.
இதில் கிாிஸ் ஜனனி , உயிாின் சுவாசம் அமைப்பு மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நம்ம திருச்செங்கோடு, பசுமை நண்பர்கள் குழு, பசுமை படை, பசுமை தமிழகம் மற்றும் பல அமைப்புகள் இணைந்து நான்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள், மக்கள் என அனைவரிடமும் மரம் கன்றுகளை வழங்கினார்கள்.
இதுகுறித்து பசுமை நண்பர்கள் கூறுகையில், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு மரக்கன்றை வைத்து அதனை முழுமையாக பராமரிக்க வேண்டும் என்றும், மரம் வளர்த்தால் கிடைக்கும் பலனை அனைவரும் அறியும் வகையில் நான்கு மாவட்டங்களில் சேர்த்து ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்து இந்நிகழ்வு நடைபெற்றது.
மேலும் எங்களுக்கு உதவியாக அமுத வேர்கள் தேவனாங்குறிச்சி,
நோ்மை கஸ்தூாிபட்டி, தமிழன் வேங்கிபாளையம், மோடமங்கலம் நண்பா்கள் குழு, மேட்டுகுளம் நண்பா்கள் குழு என தன்னார்வ அமைப்பினர் அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் போது, மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை எளிதில் உணர்த்த முடியும். ஒரு மரத்தை எளிதில் வெட்டி சாய்த்து விட முடியும். ஆனால் ஒரு மரத்தை நட்டு வைத்து அதனை முழுமையாக பராமரித்தல் பல உயிர்கள் இதன் மூலம் பயன்பெறும் என்பதை அனைவரும் உணர்ந்து மரங்களை வெட்டாமல் அதனை முழுமையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
செய்தியாளர் : மதன் - நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal