நாமக்கல் மாவட்டத்தில், கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 4ஆம் தேதி ஞாயிறுக்கிழமை தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளதாவது:
கிராம உதவி யாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக, இணையதளம் வாயிலாக வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கைபேசி எண்ணிற்கும், மின்னஞ்சல் முகவரிக்கும், குறுஞ்செய்தி யாக அனுப்பப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/ என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
இதையடுத்து, அப்பதவிக்கான திறனறி எழுத்து தேர்வு வருகிற 4.12.22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் மையங்கள்:
கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் ரெட்டிபட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அணியாபுரம் எஸ்.ஆர்.ஜி. பொறியியல் கல்லூரி, பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, வேலூர், குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆர். தொழில்நுட்ப கல்லூரி. கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இணையவழியில் விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்விற்கான ஹால் டிக்கேட் பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் அவரவர் அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பட்டுள்ளது. அதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு பதிவு அஞ்சல் வழியாக அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
Must Read : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!
விண்ணப்பதார்கள் தேர்வுக்கான ஹால் டிக்கேட் கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிச் சீட்டு மற்றும் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை தவிர அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal