உலக ரத்த தானம் தினத்தை முன்னிட்டு ரத்த கொடையாளர்களையும் ரத்த தேவைப்படுவர்களையும் சரியான நேரத்தில் கொண்டு போய் சேர்க்கும் வகையில் புதிய ரத்த செயலி ஒன்றை நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை அமைப்பினர் அறிமுகம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இயங்கி வரும் நம்ம திருச்செங்கோடு என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு பல வருடங்களாக இயங்கி வருங்கிறது. இந்த அமைப்பு மரக்கன்றுகள் முதல் ஆதரவற்றகளுக்கு தேவையான உதவிகள் என பல்வேறு சமூக சேவைகள் புரிந்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி செய்து வருகின்றனர்.
இதில் அடுத்தகட்ட நடவடிக்கையாக அர்தா என்ற ரத்த தானத்திற்கான பிரத்யேக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்து உள்ளனர். அதாவது ரத்தம் தேவைப்படுபவர்கள் இதில் எளிய முறையில் தங்கள் விவரங்களை பதிவு செய்து பயன் பெற முடியும் வகையில் அனைவரும் ஒருங்கிணைத்து உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த செயலியை அறிமுகம் செய்து உள்ளனர். மேலும் இந்த செயலி முற்றிலும் இலவசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் இதில் இணைந்து உதிரம் கொடுத்து உயிரை காப்பாற்ற உதவி புரிய வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ER ஈஸ்வரன் கலந்துகொண்டு செயலியின் பயன்பாடுகள் குறித்து தன்னார்வலர்களுக்கு எடுத்து கூறினார். இதில் PRD நிறுவனங்களின் இயக்குனர், மருத்துவர்கள் மற்றும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.