Home /namakkal /

நாமக்கல் நரசிம்மர் கோவிலில் நவராத்திரி திருவிழா - முழு விவரம்

நாமக்கல் நரசிம்மர் கோவிலில் நவராத்திரி திருவிழா - முழு விவரம்

நாமக்கல் நரசிம்மர் கோவிலில் நவராத்திரி திருவிழா

நாமக்கல் நரசிம்மர் கோவிலில் நவராத்திரி திருவிழா

Namakkal | நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோவிலில் நவராத்திரி திருவிழா இம்மாதம்  26ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாடு முழுவதும் கொண்டாடப்படும் பிரபல பண்டிகைகளில், நவராத்திரி முக்கியத்துவம் வாய்நத ஒன்றாக இருந்து வருகிறது. ‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுவது வழக்கம். பத்தாவது நாள் ‘வெற்றியின் அடையாளமாக’ விஜயதாசமி கொண்டாடப்படுகிறது’.

    இந்நிலையில், நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோவிலில் ஆண்டு தோறும், நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வரும் 26 ஆம் தொடங்கி, அக்டோபர் 6 ஆம் தேதி வரை, ஒன்பது நாட்கள் நவராத்திரி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    Also Read : ரூ.10 லட்சம் வங்கி கடன்; 50 % மானியம்- நாமக்கல் ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு

    தினமும் காலை 8 மணிக்கு, அரங்கநாயகி தாயார் பேட்டை திருவீதி புறப்பாடும், 9 மணிக்கு நாமகிரித்தாயார் பேட்டை திருவீதி புறப்பாடும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நரசிம்மர் சுவாமி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்தில் தாயார் சன்னதியில் எழுந்தருள்வார்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அக்டோபர், 4 ஆம் தேதி, இரவு 7 மணிக்கு அரங்கநாதர் சுவாமியும், நரசிம்மர் சுவாமியும், கமலாலய குளக்கரையில் எழுந்தருளி, அம்பு விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அக்டோபர் 5 ஆம் தேதி பரமபநாதன், 6 ஆம் தேதி விசேஷ சேவை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி