முகப்பு /நாமக்கல் /

104வது பிறந்தநாள் கொண்டாடிய சுதந்திர போராட்ட வீரருக்கு நடிகர்கள் வாழ்த்து..

104வது பிறந்தநாள் கொண்டாடிய சுதந்திர போராட்ட வீரருக்கு நடிகர்கள் வாழ்த்து..

X
பிறந்தநாள்

பிறந்தநாள் கொண்டாடிய சுதந்திர போராட்ட வீரர்

Tamil Actors Congratulate The Freedom Fighter In Namakkal : நாமக்கலில் 104வது பிறந்தநாள் கொண்டாடிய சுதந்திர போராட்ட வீரருக்கு, நடிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் வேளாளர் ரைஸ் மில் என்ற பெயரில் நெல் அரவை ஆலை நடத்தி வருபவர் பெரியண்ணன். 1920-ம் ஆண்டு பிறந்த இவர் முறையாக பள்ளிக்கு செல்லாத இவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு போராட்டங்களின் பங்கேற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி என்ற மனைவியும் 2 மகள் 2 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி ராஜலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் இவரது ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.   முதியவரை அவரது இளைய மகள் மற்றும் உறவினர்கள் பராமரித்து வருகின்றனர். 

இந்நிலையில், முதியவர் பெரியண்ணனுக்கு இன்று 103 வயது நிரம்பி 104வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது 100வது வயதில் பிறந்தநாள் அன்று கொரோனா காலக்கட்டம் என்பதால் பெரிதாக விழா எடுக்க முடியாததால் தற்போது 104வது வயதில் முதியவர் பெரியண்ணனுக்கு குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் புடை சூழ இன்று நடைபெற்றது.

அவர் நடத்தி வந்த வேளாளர் ரைஸ் மில்லின் அருகே முதியவர் பெரியண்ணனின் பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உறவினர்களுக்கு அவரது குடும்பத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி அங்கு வந்த முதியவர் பெரியண்ணனின் காலில் விழுந்து குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஆசி பெற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் 104வது வயதை கொண்டாடும் விதமாக கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், நடிகர் சத்தியராஜ் மற்றும் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்து வீடியோ அனுப்பி வைத்துள்ளனர். உறவினர்கள் மற்றும் நடிகர்களின் வாழ்த்து மழையால் முதியவரின் குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Local News, Namakkal