Home /namakkal /

நாமக்கலில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய ரத்த தான முகாம்

நாமக்கலில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய ரத்த தான முகாம்

ரத்த தானம் செய்த இளைஞர்கள்

ரத்த தானம் செய்த இளைஞர்கள்

நாமக்கலில் இளைஞர்கள் ஒன்றிணைந்து நண்பர்கள் ரத்ததான குழு அமைத்து ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ரத்த தானம் அனைவரும் வழங்க வேண்டும் என்றும் அவசர காலங்களில் ஒருவரை காப்பாற்ற தேவைபடும் ரத்தம் எவ்வளவு உயரிய மதிப்புடையது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரில் உள்ள இளைஞர்கள் ஒன்றாக இணைத்து நண்பர்கள் ரத்ததான குழு மூலம் மாபெரும் ரத்ததான வழங்கும் விழா நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை உடன் இணைந்து நண்பர்கள் ரத்ததான குழு சார்பாக, இளைஞர்கள் மத்தியில் ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மற்றும் வரும் காலங்களில் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை ஏராளமானோர் தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்கினார்கள். மேலும் இந்த நிகழ்வில் அவசர காலக்கட்டத்தில் கிடைக்கப் பெறாத ரத்த வகைகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து நண்பர்கள் ரத்ததான குழுவினர் கூறுகையில், ’இது எங்களது முதல் முயற்சியாக இறங்கியுள்ளோம். இங்கு அவ்வபோது தலைவர்கள் பிறந்தநாள் என்றால் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.

    ரத்த தானம் செய்யும் இளைஞர்


    தற்போது நாங்கள் இளைஞர்கள் மற்றும் ஊரில் உள்ள அனைத்து நண்பர்களையும் இணைக்கும் வகையில் முதல் முறையாக நண்பர்கள் ரத்ததான குழு என்று தொடங்கியுள்ளோம். அதன்மூலம்,  இளைஞர்களுக்கு ரத்ததான பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவமனைகளில் உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்கப் பெறாமல் எவ்வளவு அவதிக்குள்ளாகின்றனர் என்பதை தெரியப்படுத்தும் வகையில் இந்த ரத்ததான விழா நடத்தினோம்.

    மேலும் அனைவரும் உயரிய பங்களிப்பான ரத்த தானத்தை தானமாக செய்து மனித சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, ரத்தத்திற்கு விலைபேசி வியாபாரம் ஆக்கி விடாமல் தானமாக கொடுத்து தரணி போற்ற தனித்து நின்று மனித நேயத்தை காப்போம் என்று தெரிவித்தனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி