Home /namakkal /

மறைந்த நண்பனின் நினைவாக மருத்துவச் சோதனை முகாம்களை நடத்திய இளைஞர்கள்

மறைந்த நண்பனின் நினைவாக மருத்துவச் சோதனை முகாம்களை நடத்திய இளைஞர்கள்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

நாமக்கலில் மறைந்த நண்பனின் நினைவாக இளைஞர்கள் முதியோர்களுக்கான மருத்துவ முகாம்களை நடத்தினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நண்பனின் நினைவாக ஒரே நாளில் மற்றும் ஒரே இடத்தில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, ரத்த தானம் என இலவச மருத்துவ முகாம்களை நடத்தி தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அசத்தியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் கோவிந்தன் என்ற மறைந்த நண்பனின் நினைவாக அவ்வூர் மக்கள் பயன் பெறும் வகையில் ஒரே இடத்தில் மூன்று முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஊர் மக்கள் முகாமில் பங்கேற்று எளிய முறையில் தங்களுடைய கண் மற்றும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை காண்பித்து பயன்பெற்றனர். மேலும் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் அதே இடத்தில் ரத்த தானம் செய்யும் வகையில் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.

    மருத்துவ முகாம்


    இந்த மூன்று முகாமை பசுமை நண்பர்கள் குழு, நேர்மை (INTERGRITY TRUT) என்ற தன்னார்வ அமைப்பு மற்றும் முன்னாள் மாணவர்கள் என இணைந்து அப்பகுதி மக்களுக்கு முகாமை நடத்தினர்.

    மருத்துவ முகாம்


    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களது நண்பரான கோவிந்தன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று முகாம்களை ஒரே இடத்தில் நடத்தினால் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    மருத்துவ முகாம்


    அவர்களும் ஒரே பகுதியில் தங்களுடைய உடம்பில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று முதற்கட்டமாக நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், அரசன் கண் மருத்துவமனை மூலம் கண் முகாமும், ஜே.ஜே நடராஜ் பல் மருத்துவமனையின் மூலம் பல் பரிசோதனை சிகிச்சை மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையின் ரத்த தானம் முகாம் என மூன்று நிகழ்வுகளாக நடத்தப்பட்டது.

    முகாமில் 10க்கும் மேற்பட்டோரை இலவச கண் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்பட்டது‌. 30க்கும் மேற்பட்டோர் பெண்கள், ஆண்கள் என ரத்த தானம் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பல் சம்பந்தமான பிரச்சினைகளை காண்பித்து பயன்பெற்றதாக தெரிவித்தனர். இனி வருடாவருடம் கோவிந்தன் நினைவாக பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு என்று முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    மேலும் முகாமில் பங்கேற்று மக்கள் கூறுகையில், இதுபோன்று ஒரே இடத்தில் இலவசமாக மூன்று முகாம்கள் நடைபெறுவது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ஒரு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வருபவர்கள், பற்களை சுத்தம் செய்து கொண்டு செல்கின்றனர். இந்த மாதிரியான முகாம்கள் நடைபெறுவது மக்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறினார்கள்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி