நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான பாலமுருகன்(25). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் இயந்திரங்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இப்படி இவரின் ஆர்வம் அதிகரிக்க கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது ஜப்பான் நாட்டில் எல்லா பொருட்களையும் தனித்தனியாக வினியோகிக்க இயந்திரங்கள் இருப்பதைபோல, பால் வினியோகிக்க ஒரு இயந்திரத்தை அதாவது ”மில்க் வெண்டிங் மெஷின்” ஐ உருவாக்க எண்ணினார்.
2 ஆண்டு உழைப்பு :
இந்நிலையில், பாலமுருகன்.கிட்டத்தட்ட 2 ஆண்டு காலம் இந்த இயந்திரத்தை உருவாக்க செலவிட்டுள்ளார். இவரது சொந்த ஊரான காளப்பநாயக்கன்பட்டியில், உறவினரின் வெல்டிங் கடையில் இயந்திரத்திற்கான எல்லா வேலைகளையும் செய்து அதற்கு ஒருவடிவம் கொடுத்து கட்டமைத்துள்ளார். இந்த இயந்திரமானது, பணத்தை செலுத்திய பிறகு பொருட்களை வழங்கும் தானியங்கி இயந்திரம் ஆகும். ஆனால் இவரது இயந்திரத்திற்கு நாணயம் மற்றும் பண நோட்டுகளை ஸ்கேன் செய்து பார்த்து பால் விநியோகிக்க, சரியான ஸ்கேனரை கிடைக்காமல் பணிகள் தேக்கம் அடைந்தது.எனவே இதை சரி செய்ய தைவான் நாட்டில் இருந்து, பண நோட்டுகளை துல்லியமாக ஸ்கேன் செய்யும் கருவியை இறக்குமதி செய்து அதை தன் மெஷினில் பொருத்தியுள்ளார்.
இதையும் படிங்க : ஊட்டியில் தொடங்கிய கோடைகால சீசன்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
முயற்சி வெற்றி :
இந்த கருவி பலன் தந்தது, பால் விநியோகம் கனகச்சிதமாக நடந்தது. சோதனை முயற்சிக்காக அவரது வீட்டில் வளர்க்கப்படும் 20 மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை இந்த மில்க் வெண்டிங் மிஷின் மூலம் விற்பனை செய்து பார்த்தார். இவரது முயற்சி வெற்றியை தந்தது. அதுவும் சரியாக கொரோனா காலகட்டத்தில், ஆள் இல்லா தானியங்கி இயந்திரம் ஊர் மக்களுக்கு பால் விநியோகம் செய்தார்.
எப்படி செயல்படுகிறது :
இது ஊர் மக்களுக்கு பெரும் உபயோகமாக இருந்தது. ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என இயந்திரத்தில் உள்ளீடு செய்து, ரூ.10 செலுத்தினால் 250 மி.லி. பால் விநியோகிக்கப்படும் பணத்திற்கு ஏற்றார்போல் பால் விநியோகம் கச்சிதமாக நடைபெற்றது. பணத்தோடு மட்டும் அல்ல கார்டு சிப் என எதை கொண்டு வந்தாலும்அதில் பால் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளார் பாலமுருகன். அதாவது இதற்கென பிரத்தியேக டிஜிட்டல் கார்டு வழங்கப்பட்டு அதில் பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்யும் வசதியும் செய்து கொள்ளலாம்.
3 வழிகள் உள்ளன :
அதை பால் விநியோக இயந்திரத்தில் தேய்த்து, தினமும் பால் பெற்றுக்கொள்ளலாம். இதைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு கீ செயின் போன்ற வடிவில் சிப் வசதியும் உண்டு. இந்த 3 வழிகளில் ஒரு வாடிக்கையாளர் பாலைப் பெறமுடியும். அதுமட்டுமின்றி, முதியவர்களின் வசதிக்காக ஒரு பட்டனை அழுத்தி பாலைப் பெறும் மற்றொரு சிறப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அடுத்த கண்டுபிடிப்பு :
”ஆரம்பத்தில் 2 லட்சம் வரை செலவானது. ஆனால் இந்த இயந்திரத்தை ரூ.60 ஆயிரத்திலேயே உருவாக்கிவிடலாம். காலை முதல் மாலை வரை பால் கெடாமல் இருக்க, குளிரூட்டி பொருத்தப்பட்ட இயந்திரத்தை, ரூ.1.75 லட்சம் செலவில் உருவாக்கிவிடலாம்.பால் விநியோக இயந்திரத்தை போல, கீரைகளை விநியோகிக்கும் இயந்திரத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறேன்” என்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal