முகப்பு /நாமக்கல் /

Namakkal Weather Update : ராசிபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு..

Namakkal Weather Update : ராசிபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு..

X
ராசிபுரத்தில்

ராசிபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை

Namakkal Weather Update : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால், 2 மின்கம்பங்கள் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து மின்கலன் விழுந்தன.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம், அத்தனூர் உள்ளிட்ட பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய சாரல் மழையானது பெய்தது. இந்த சூறாவளி காற்று வீசியதில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து மின்கலன் மற்றும் ராசிபுரம் to புதுப்பாளையம் செல்லும் வழியில் 2 மின்சார கம்பங்கள் சாலையில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

ராசிபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை

ராசிபுரம் ட. புதுப்பாளையம் செல்லும் சாலையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. அதிர்ஷ்டவசமாக மின்கம்பம் சாயும் நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இவ்வாறு, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    First published:

    Tags: Local News, Namakkal, Weather News in Tamil