Home /namakkal /

நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்கள் இவைதான்

நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்கள் இவைதான்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டத்தில், விநாயர் சிலை ஊர்வலம் நடத்தி, விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் இடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

    விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    அரசியல் கட்சிகளும், பொது மக்களும் போட்டி போட்டுக் கொண்டு விநாயர் சிலைகளை வீட்டிலும், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் வைத்து வழிபட்டுவருகின்றனர்.

    கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்க உள்ளதால் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், திருச்செங்கோடு வட்டம் எஸ். இறையமங்கலம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகா் கோயில் அருகில் ஊா்வலமாக கொண்டு வரப்படும் சிலைகளைக் கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, குமாரபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதிக்கு ஓங்காளியம்மன் கோயில் படித்துறை, பாப்பம்பாளையம் முனியப்பன் கோயில், குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமம்,

    பழையபாலம் அண்ணாநகா், குமாரபாளையம் அமானி கலைமகள் வீதி, பரமத்திவேலூா் காசி விஸ்வநாதா் கோயில் அருகில், சோழசிராமணி அணை கீழ் பகுதியில் ஈஸ்வரன் கோயில் பின்புறம், மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில் அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரை படித்துத்றை ஆகிய பகுதிகளில் கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தகவல்களுக்கு, மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்டசுற்றுச்சூழல் பொறியாளரைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி