நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வேட்டாம்பாடி மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும்
நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது
இந்த வருடத்திற்கான திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கியது.
இதனையடுத்து பக்தர்கள் தினமும் மாரியம்மனுக்கும் புனித நீர் மற்றும் பால் ஊற்றி வழிபட்டனர். மேலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்களும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தீர்த்தம் குடம் எடுத்தல், அக்கினி கரம் எடுத்தல்,அலகு குத்துதல், வாணவேடிக்கை, அம்மன் திருவீதி உலா,பொங்கல் வைத்தல், மஞ்சள் நீராடல் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இக்கோயில் திருவிழா இவ்வூர்மக்களுக்கு முக்கிய நிகழ்வாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் பங்கேற்பார்கள்.
இக்கோயிலின் முதல் நாள் திருவிழாவாக கருப்பனார் கோயிலுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இரண்டாம் நாள் மாரியம்மன் கோயிலுக்கு மாவிளக்கு மற்றும் பூக்குழி வழிபாடு மூன்றாம் நாள் அம்மனுக்கு நேர்த்திகடனாக கிடாவெட்டி பக்தர்கள் முடி காணிக்கையும் செலுத்தினர்.
மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தது. இதில் முன்னதாக இரவு பூக்குண்டத்துக்கு அலங்காரம் செய்து, பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நான்காம் நாள் திருவிழாவாக மஞ்சள் நீர் வழிபாடு மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.