Home /namakkal /

நாமக்கல்லில் தொடரும் மழை: கால்நடைகளை தாக்கும் நோய்- தடுப்பது எப்படி? 

நாமக்கல்லில் தொடரும் மழை: கால்நடைகளை தாக்கும் நோய்- தடுப்பது எப்படி? 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் பெய்துவரும் மழையின் கால்நடைகள் பாதுகாப்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் மழை பெய்யும் என்று ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நாட்களில் கால்நடைகளுக்கு தீவனத்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில், அடுத்து 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நேற்று 22 மி.மீட்டரும், இன்று 12 மி.மீட்டரும், நாளை மறுநாள் 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    வெப்பநிலையைப் பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    காற்று மணிக்கு 8 கி.மீ வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 60 சதவீதமாகவும், அதிகபட்சமாக 75 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் மழைக்காலங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்று தெரியவருகிறது.

    கலப்பு தீவனத்தில் ஈரப்பதம் 11 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் போது, பூஞ்சை நச்சு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தவிர மூட்டைகளில் இருந்து அன்றாட தேவைக்கான கலப்பு தீவனத்தை எடுத்தபின் சாக்கு பையை காற்று புகாமல் கட்டி வைக்க வேண்டும்.

    பொதுவாக மழைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் குடற்புழு நோயை உண்டாக்கும் இளநிலை பருவ புழுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதால், செம்மறி மற்றும் வெள்ளாடுகளில் உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து, உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம் என்று கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி