முகப்பு /நாமக்கல் /

கொங்கு டான்ஸ் பாத்துருக்கீங்களா? நாமக்கல்லில் ஒரே நேரத்தில் 600 பேர் ஆடிய அசத்தலான வள்ளி கும்மியாட்டம்

கொங்கு டான்ஸ் பாத்துருக்கீங்களா? நாமக்கல்லில் ஒரே நேரத்தில் 600 பேர் ஆடிய அசத்தலான வள்ளி கும்மியாட்டம்

X
கும்மியாட்டம்

கும்மியாட்டம்

Kongu Dance | நாமக்கல், ஆரியூர், தோளூர், மோகனூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 600க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்று சேர ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

நாமக்கல் அடுத்துள்ள ஆரியூரில் புகழ்பெற்ற முத்துசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கொங்கு நாட்டின் பாரம்பரிய வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் நடைபெற்றது.

இந்த வள்ளி கும்மியில் வள்ளியின் பிறப்பு முதல் முருகப் பெருமானுடன் அவரது திருமணம் வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிருந்தது.

இதில் கொங்கு ஈசன் வள்ளி கும்மி குழுவினரும் நாமக்கல், ஆரியூர், தோளூர், மோகனூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 600க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

நாமக்கல் | விமர்சையாக கொண்டாடப்பட்ட 74- வது குடியரசு தின விழா(புகைப்படங்கள்)

மேலும் இந்த ஆட்டத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்ததோடு தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

First published:

Tags: Local News, Namakkal