முகப்பு /நாமக்கல் /

கடல்சார் படிப்பு படிக்க முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் - நாமக்கல் திருநங்கை மாணவி ஸ்ரேயா கோரிக்கை..

கடல்சார் படிப்பு படிக்க முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் - நாமக்கல் திருநங்கை மாணவி ஸ்ரேயா கோரிக்கை..

X
நாமக்கல்

நாமக்கல் திருநங்கை மாணவி

Namakkal Transgender Student shreya | தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி என்ற பெயரை பெற்றார் நாமக்கல் ஸ்ரேயா.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 12ம் வகுப்பு திருநங்கை மாணவி ஸ்ரேயா என்பவர் 337 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.  

இவர் தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி  என்பது குறிப்பிடத்தக்கது. சாதி , இனம் பாகுபாடு குறித்து பேசும் நிலையில் பாலின வேறுபாடு காரணம் காட்டி பிள்ளைகளை ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை மாறி மூன்றாம் பாலின குழந்தைகளை ஆதரித்து அரவணைத்து வளர்த்து வந்தால் சாதிக்க முடியும் என நிரூப்பித்துள்ளார் நாமக்கல் மாவட்ட மாணவி திருநங்கை ஸ்ரேயா.

தற்போது தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 378 பேர் தேர்வு எழுதிய நிலையில் 356பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 94 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த ஆவராங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் திருநங்கை ஸ்ரேயா 12ஆம் வகுப்பு முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் 62 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 56 மதிப்பெண்களும் பொருளியலில் 48 மதிப்பெண்களும் வணிகவியலில் 54 மதிப்பெண்களும் கணக்கு தேர்வில் 58 மதிப்பெண்களும் கணினியில் 59 மதிப்பெண்களும் என 337 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் திருநங்கையாக தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் சக ஆசிரியர்கள் , மாணவிகள் அவருக்கு வாழ்த்துக்களைக் தெரிவித்தனர்.

திருநங்கை மாணவி ஸ்ரேயா தனது தாய் வளர்பில் வளர்ந்து வருவதாகவும் தொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் தாயின் அரவணைப்பு காரணமாக 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற முடிந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் அரசு தனக்கு உதவி செய்ய முன் வந்தால் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும் என மாணவி ஸ்ரேயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்

மேலும் தொடர்ந்து தன்னை போன்ற திருநங்கைகள் கல்வியில் கவனத்தை செலுத்தினால் வாழ்வில் மேன்மை அடைய முடியும் என ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: 12th exam, Local News, Namakkal, Transgender