முகப்பு /செய்தி /நாமக்கல் / 10ஆம் வகுப்பு வரை ஆண்கள் பள்ளி...12ஆம் வகுப்பில் பெண்கள் பள்ளி... சாதித்த திருநங்கை ஸ்ரேயா...!

10ஆம் வகுப்பு வரை ஆண்கள் பள்ளி...12ஆம் வகுப்பில் பெண்கள் பள்ளி... சாதித்த திருநங்கை ஸ்ரேயா...!

திருநங்கை ஸ்ரேயா

திருநங்கை ஸ்ரேயா

தேர்ச்சி பெற்ற திருநங்கை ஸ்ரேயா பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் துறை சார்ந்த ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கலில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த திருநங்கை ஸ்ரேயா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு வரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி படித்து வந்த நிலையில் பதினோராம் வகுப்பு  அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 337 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஸ்ரேயா பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 62, ஆங்கிலம் 56,  பொருளியல் 48, வணிகவியல் 54, கணித பதிவியல் 58, கணிணி பயன்பாடு 89 என மொத்தம் 337 பெற்று தேர்ச்சி பெற்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

top videos

    செய்தியாளர்: ரவிச்சந்திரன் ராஜகோபால்

    First published:

    Tags: Local News, Namakkal, Public exams