முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் பாரம்பரிய மீட்பு திருவிழா.. அனைவரின் கவனத்தை ஈர்த்த நாட்டு மாடுகள் கண்காட்சி!

நாமக்கல் பாரம்பரிய மீட்பு திருவிழா.. அனைவரின் கவனத்தை ஈர்த்த நாட்டு மாடுகள் கண்காட்சி!

X
நாமக்கல்

நாமக்கல் மாடுகள் திருவிழா

Namakkal Festival | பாரம்பரிய மீட்பு திருவிழாவில் நடைபெற்ற காளை மாடுகள் கண்காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் மிக பிரமாண்டமாக முறையில்  தமிழர் பாரம்பரிய மீட்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் பொம்மை குட்டைமேடு அருகே தமிழர் பாரம்பரிய மீட்பு திருவிழா நடைபெற்றது . இதற்காக ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான விழா பந்தல் மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் இத்திருவிழாவில் அழிந்து வரக்கூடிய பாரம்பரிய நாட்டுப் பசுகள், காளைகள், ஆடுகள் மற்றும் கோழிகள், பாரம்பரிய நெல் மற்றும் காய்கறி விதைகள் காட்சிப்படுத்தப்பட்டதோடு , இயற்கை வழி விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், கீரைகள், இளநீர் உள்ளிட்டவற்றை உற்பத்தியாளர்களே காட்சிப்படுத்திருந்தனர். மேலும் இயற்கை முறையில் செய்த பாரம்பரிய உணவுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் இப்பாரம்பரிய மீட்பு திருவிழாவில் நடைபெற்ற காளை மாடுகள் கண்காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகுந்த வரவேற்பு பெற்றது. கண்காட்சியில் நாட்டு மாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான காளை மாடுகள் மற்றும் ஆடுகள் கோழிகள் அனைத்தும் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்ததை மக்கள் ஆர்வமாகக் கண்டுகளித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Festival, Local News, Namakkal