Home /namakkal /

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    நாமக்கல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று நாமக்கல் செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம் மற்றும் சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி