ஹோம் /நாமக்கல் /

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு மாதமும் அந்தந்த துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கப்படும். அதன்படி வாழவந்தி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

  இதனால் மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய், இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம் பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப் பாளையம், சின்னகரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம் பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல் திருச்செங்கோடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், திருச்செங்கோடு நகரம், கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயனம் பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்கவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம்பாளையம், சிந்தம்பாளையம், கைலாசம்பாளையம், திருமங்கலம், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: மதன், நாமக்கல்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal