Home /namakkal /

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல்  மாவட்டம் புதன்சந்தை, பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி துணை மின் நிலையங்களில்  நாளை (வியாழக் கிழமை) 8 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Paramathi, India
    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை, பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி துணை மின் நிலையங்களில் நாளை(வியாழக் கிழமை) 8 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை, பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை, பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்ற தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் ராணி, நாகராஜன் தெரிவித்துள்ளனர்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, களங்காணி, காரைக்குறிச்சி,

    இதபோல், பரமத்திவேலூரில், சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி