Home /namakkal /

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் கீழே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அந்தந்த துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்களில் மேல் இருக்கும் செடிகள், கொடிகள், மரக்கிளைகள் மோதி இருக்கிறதா, மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கபட்டு வருகிறது.

    மேலும் மின் வினியோக பெட்டி, மின் கம்பம், மின் கம்பி உள்ளிட்ட சாதனங்கள் சரியாக உள்ளதா என்று பராமரிப்பு பணிகள் போது பார்க்கப்படும். அந்த வகையில் மாவட்டத்தில் நாளை ஒரு சில துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி, புதன்சந்தை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக் கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, களங்காணி, காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

    மேலும், எருமப்பட்டி துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, என்.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி