ஹோம் /நாமக்கல் /

Namakkal | கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் குண்டு குழியுமாக தரைப் பாலம்: சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

Namakkal | கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் குண்டு குழியுமாக தரைப் பாலம்: சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

சேதமடைந்த நிலையில் சாலை

சேதமடைந்த நிலையில் சாலை

நாமக்கலில் குண்டு குழியுமாக உள்ள தரைப் பாலத்தில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து வெப்படை செல்லும் சாலையில் பாலம் என்ற ஊர் உள்ளது. இச்சாலை அதிக அளவில் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையாக உள்ளதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

  இப்பகுதியில் உள்ள தரைப் பாலத்தின் மேல் போடப்பட்டுள்ள சாலை, பள்ளங்கள் ஏற்பட்டு குண்டு குழியுமாக தெரிகிறது. இப்பாலம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சாலையில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் பாலம் கட்டப்பட்டு சிறிது காலத்திலே சாலையில் குழிகள் ஏற்பட தொடங்கியதாக கூறிகிறார்கள்.

  குழிகள் ஏற்படும் போது சாலையில் தார் ஊற்றி சரி செய்கின்றனர்.  ஆனால் மீண்டும் அதேபோல் குழிகள் ஏற்படுகின்றன. தற்போது தரைப்பாலம் முழுவதும் ஆங்காங்கே கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சாலை மோசமடைந்து காணப்படுகிறது.

  சேதமடைந்த நிலையில் சாலை

  இதனால் அவ்வழியாக பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்றப்பட்டுள்ளது. மழை வரும் போதெல்லாம் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குழிகள் இருப்பது தெரியாமல் வாகனங்கள் குழியில் விட்டு செல்கின்றன.

  இதனை விரைந்து கவனித்து எந்தவொரு அசம்பாவிதமும் நடை‌பெறுவதற்கு முன்பு தரைப் பாலத்தின் மீது ஏற்பட்டுள்ள குழிகளை சரியான முறையில் சரிசெய்து மீண்டும் இதுபோன்ற குழிகள் ஏற்படாதவாறு தயார் செய்யவேண்டும். விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

  செய்தியாளர்: மதன்- நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal