முகப்பு /நாமக்கல் /

"வரிசையா வா" பெண்கள் போல் வேடமிட்டு கேட்வாக் சென்ற மாணவர்கள்!

"வரிசையா வா" பெண்கள் போல் வேடமிட்டு கேட்வாக் சென்ற மாணவர்கள்!

X
மாணவர்கள்

மாணவர்கள் கேட் வாக்

Namakkal News | நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் இயங்கி வரும்  லொயோலா தனியார் கல்லூரியில்  உலக மகளிர் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் இயங்கி வரும் இலொயோலா தனியார் கல்லூரி-யில் உலக மகளிர் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இறை வணக்கத்துடன் குத்து விளக்கு ஏற்றி துவங்கிய விழாவானது, மிகவும் வித்தியாசமான முறையில் பெண்களின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாக நடைபெற்றது.

இவ்விழாவிற்குபேராசிரியர் கேத்தரின் பிரதீபா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முதல்வர் தந்தை முனைவர் சாமுவேல் ஜெயசீலன் அவர்கள் ஆசியுரை வழங்கினார்.

உலக மகளிர் தின நிகழ்ச்சியில் மாணவர்கள் பெண்கள் போல் வேடமிட்டு கேட்வாக் செய்தது அனைவரையும் கவர்ந்தது...பெண்கள் பள்ளிப்பருவத்தில் இருந்து கல்லூரி பருவத்திற்கு சென்று பின் வேலைக்கு சென்று திருமணம் ஆகி குடும்பப் பெண்ணாக மாறும் நிகழ்வினை தத்ரூபமாகசெய்தமாணவர்களுக்கு மாணவிகள் கைகளை தட்டி ஆரவாரத்துடன் உற்சாகபடுத்தினர்....

பெண்கள் வீட்டின் கண்கள் மட்டுமல்ல நீங்களே நாட்டின் கண்கள்.. மங்கையாராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும், எனவே நாம் ஒவ்வொருவரும் நம் பெருமையை உணர்ந்து வாழ்வில் உயர வேண்டும் என மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் மாணவர்கள்மிகச் சிறப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

ஆசிரியர்கள்,தூய்மை பணியாளர்கள் விடுதி காப்பாளர்கள் என கல்லூரியில் பணியாற்றும் அனைத்து பெண்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது...

பெண்களின் பெருமையை மீட்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றது. மாணவிகள் பேராசிரியர் பெருமக்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெண்களுக்கான விழாவிற்கு பெருமையை சேர்த்தனர்.

First published:

Tags: International Women's Day, Local News, Namakkal