முகப்பு /நாமக்கல் /

ஊஞ்சலில் ஆடிய சாய்பாபா.. தத்ரூப சிலைகளை கண்டு மெய்சிலிர்த்த பக்தர்கள்!

ஊஞ்சலில் ஆடிய சாய்பாபா.. தத்ரூப சிலைகளை கண்டு மெய்சிலிர்த்த பக்தர்கள்!

X
சாய்பாபா

சாய்பாபா

Namakkal saibaba | நாமக்கல்லில் உள்ள சாய்பாபா கோவிலில் உள்ள சிலை, உயிருள்ள மனிதர் போல் காட்சியளிப்பதால் பக்தர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் சாய் தத்தா பிருந்தாவனம் என்ற சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், 2018ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாய்பாபா தொடரை பார்த்து சாய்பாபாவின் மீது அலாதி பிரியம் கொண்டு தனது முழு வாழ்க்கையும் சாய்பாபாவுக்கு அர்ப்பணித்து சாய்பாபாவின் மீது அன்பு கொண்டு மது பார்த்தசாரதி என்பவர் நாமக்கல்லில் சாய்பாபா கோவிலை நிறுவியுள்ளார்.

மது பார்த்த சாரதி அவர்கள்,2010ஆம் ஆண்டு, சாய்பாபா வாழ்க்கையை விவரிக்கும் தொலைக்காட்சி தொடரை பார்த்து சாய்பாபாவின் மீது அலாதி அன்பு கொண்டு சாய்பாபாவிற்காக ஒரு கோவிலை கட்ட எண்ணினார். அதன்படி பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர் 2018 ஆம் ஆண்டு நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள பிருந்தாவனம் என்னும் இடத்தில் இக்கோயிலை கட்டி முடித்தார்.

இந்த கோவிலை பார்ப்பதற்கு அச்சு அசலாக சாய்பாபா நேரில் இருப்பது போல், சாய்பாபாவின் தியான பீடமாக கருதப்படும் வகையில் அமைந்து.

இங்கே, சாய்பாபாவின் உருவச்சிலை மற்றும் சாய்பாபா படுத்து உறங்குவது போன்று காட்சி அளிக்கும் சிலிக்கான் சிலையும், உயிருள்ள சாய்பாபா படுத்திருப்பது போன்றே வடிவமைத்துள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த சிலைகளைப் பார்த்து, உண்மையிலேயே சாய்பாபா படுத்திருப்பதாக தோன்றுவதாக, வியப்புடன் கூறுகின்றனர்.

வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளும் அன்னதானம் வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றிருக்கிறன. இங்கே, பார்ப்பதற்கு கண்ணெதிரே நிற்கும் சாய்பாபாவை போன்று காட்சியளிக்கும் சிலையை பார்ப்பதற்கு, ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்தவண்ணம் உள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal, Saibaba