நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியில் 63ம் ஆண்டு இளையவர் சடுகுடு கபடி குழுவின் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 24 அணிகள் போட்டியில் கலந்துகொண்டு விளையாடியது. இறுதிப் போட்டியை சேலம் சரக காவல்துறை தலைவர் (டிஐஜி) ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டியை துவக்கி வைத்தனர்.
இறுதிப்போட்டியில் இன்கம் டேக்ஸ் 11 க்கு 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும்,யு.பி பிரதர்ஸ் அணி 2 வது இடத்திலும், சென்னை சிட்டி போலீஸ் 3 வது இடத்திலும்,ஈரோடு அணி 4 வது இடத்தை பெற்றனர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மேலும் இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து 62 ஆண்டுகளாக கபாடி போட்டியை முறையாக நடத்தி பதிவு செய்த காரணத்தால் இந்தியன் ரெக்கார்ட் அகாடமி, ஆசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று அதற்கான சாதனை விருதை சடுகுடு கபடி குழுவினரிடம் வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இக்கிராமத்தில் கபாடி போட்டியில் விளையாடிய வீரர்கள் தற்போது இந்திய அணியிலும், முக்கிய மத்திய அரசு பொறுப்புகளிலும் இருப்பது என்பது பெருமைக்குரியதாகும். மேலும் இப்போட்டியினைகான ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் விளையாட்டினை கண்டு ரசித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal