Home /namakkal /

Namakkal | குண்டு குழியுமாக உள்ள சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்

Namakkal | குண்டு குழியுமாக உள்ள சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்

நாமக்கல் சாலை

நாமக்கல் சாலை

Namakkal | நாமக்கல் மாவட்டம் நெட்டவேலம்பாளையம் பகுதியில் உள்ள பிரதான சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் நெட்டவேலம்பாளையம் பகுதியில் உள்ள பிரதான சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

    திருச்செங்கோடு டூ குமாரபாளையம் செல்லும் பிரதான சாலையாக இந்தச் சாலை உள்ளது. இச்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்வதற்கே சிரமப்படுகின்றன. பலர், நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

    பரபரப்பாக இயங்கும் இச்சாலையில் வாகனங்களில் செல்வோர், திடீரென குழியை பார்த்ததும் ஏதாவது ஒரு பக்கம் திருப்பும் போது பின்னால் வரும் வாகனத்தோடு மோதும் சூழ்நிலை உள்ளது. மேலும் மழை வரும் போதெல்லாம் பள்ளத்தில் மழைநீர் தேங்கி அச்சாலையில் செல்லும் வாகனங்கள் குழி இருப்பது தெரியாமல் அதில் விட்டு நிலை தடுமாறுகின்றனர்.

    இச்சாலையானது எப்போதும் வாகனங்கள் அதிகம் செல்லக்கூடிய ஒன்றாக உள்ளது. முக்கியமாக இரவு நேரங்களிலும் வாகனங்களில் செல்வோர் இந்த பள்ளங்களில் விட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பள்ளி, கல்லூரி செல்வோர் முதல் வேலைச் செல்வோர் என அதிகளவில் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. அதுமட்டுமின்றி கனரக வாகனங்களும் இவ்வழியாக சென்று வருகின்றன.

    இதனால், விபத்து ஏற்படும் முன் விழிப்புணர்வாக செயல்பட்டு இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி