Home /namakkal /

விரிவாக்கப் பணி நடைபெறும் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள்- விபத்து ஏற்படும் அபாயம்

விரிவாக்கப் பணி நடைபெறும் சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள்- விபத்து ஏற்படும் அபாயம்

நாமக்கல் சாலை விரிவாக்கப் பணி

நாமக்கல் சாலை விரிவாக்கப் பணி

திருச்செங்கோடு டூ பள்ளிபாளையம் செல்லும் சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் நிலையில் பேருந்துகள், கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டூ பள்ளிபாளையம் செல்லும சாலையில் கன்னியாகுமரி வழி திட்டத்தின் கீழ் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இச்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    முன்னதாக தோக்கவாடி டூ பள்ளிபாளையம் வரையில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு சாலையோரத்தில் உள்ள கடைகள், வீடுகள் அகற்றம் செய்யப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. ஆலாம்பாளையம் பகுதியில் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதால் காவிரி RS வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விரிவாக்கப் பணி நடைபெறும் சாலை


    ஆனால் எஸ்பிபி காலனி முதல் திருச்செங்கோடு வரை மாற்றுப்பாதையில் இல்லாததால் அனைத்து வாகனங்களும் வேலைகள் நடைபெற்று வரும் இதே சாலை வழியாகவே செல்கின்றனர்.

    விரிவாக்கப் பணி நடைபெறும் சாலை


    தற்போது சாலை விரிவாக்கம் பணிகளால் மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரத்தில் போடப்பட்டுள்ளன. மேலும் ஜேசிபி போன்ற இயந்திரங்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருக்கிறது. ஆங்காங்கே பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வாகனங்கள் நிதானமாகவும் கவனமாகவும் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் இதையலெ்லாம் பொருட்படுத்தாமல் பேருந்துகள் கனரக வாகனங்கள் போன்றவைகள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    அதுமட்டுமின்றி தனியார் பேருந்துகள் இந்த வழியாக அதிக அளவில் இயங்கி வருகின்றன. குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும், பயணிகளை ஏற்றுவதில் தங்களுக்குள் ஏற்படும் போட்டி என தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கண்மூடித்தனமாக ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதாக கூறுகிறார்கள். மேலும் சாலை பணிகள் தொடங்கப்பட்டு சில மாதங்களிலே ஏராளமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    ஆகையால், சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தந்து இச்சாலையில் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் விபத்துகள் ஏற்படாதவாறு நிதானமாக செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி