Home /namakkal /

Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு- ஆராய்ச்சி நிலையம் தகவல்

Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு- ஆராய்ச்சி நிலையம் தகவல்

மழை

மழை

Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அடுத்த நான்கு நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நாமக்கல் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் குறைந்தபட்சமாக 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 65 முதல் 45 சதவீதமாகவும் இருக்கும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர்: மதன், நாமக்கல்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி