முகப்பு /நாமக்கல் /

3.5 கோடி முட்டைகளை தினமும் உற்பத்தி செய்யும் நாமக்கல் 

3.5 கோடி முட்டைகளை தினமும் உற்பத்தி செய்யும் நாமக்கல் 

X
முட்டை

முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  

Namakkal | தினமும் உற்பத்தி செய்யப்படும் 3.50 கோடி முட்டைகளில் தமிழகம், கேரளா மாநிலத்துக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

3.5 கோடி முட்டைகளை தினமும் உற்பத்தி செய்யும் நாமக்கல் மண்டலம், தேசிய அளவில் கோழி முட்டை உற்பத்தியில்,  தனி சிறப்பு பெற்றுள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செய்கிறது.

தினசரி முட்டை உற்பத்தி;

இங்கு, பண்ணைகளில் வளர்க்கப்படும், 5 கோடி கோழிகள் மூலம், தினமும், 3.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழகம், கேரளா மாநிலத்துக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது.

விலை நிர்ணயம் ;

நாமக்கல்லில் முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு‌ நிர்ணயித்து வருகிறது. வாரத்திற்கு மூன்று நாட்கள் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் அடங்கிய குழு தினசரி முட்டை விலையை நிர்ணயித்து வருகிறது.

மேலும் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற இங்கே கிளிக் செய்யவும்

தினமும் ஒரு முட்டை ;

முட்டையில் புரோட்டீன்கள், விட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்ற சத்துக்கள் இருப்பதுடன், கோலைன் என்ற ஒரு சிறப்பு பொருள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே நாம் தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால், நம்ப முடியாத பல்வேறு மாற்றத்தை நமது உடலில் காணலாம். தினமும் நாம் முட்டை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால், நமது உடலின் மூளை, எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது என மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Egg, Local News, Namakkal