Home /namakkal /

Namakkal | நாளை ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - விவரங்கள் இதோ

Namakkal | நாளை ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - விவரங்கள் இதோ

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Namakkal | நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    வேலைத் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு எளிய முறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (08.07.2022) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேலாளர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

    அதுமட்டுமின்றி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர், பிளஸ்-2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித்தகுதி உடையவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.

    மேலும், இந்த முகாமானது முற்றிலும் இலவசமாக நடக்கிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. இம்முகாமில் பங்கு பெறுவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி