முகப்பு /நாமக்கல் /

ராசிபுரத்தில் பணி பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்..

ராசிபுரத்தில் பணி பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்..

X
ஆர்ப்பாட்டத்தில்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

Namakkal News | நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில், ஆசிரியர் பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டத்தை அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில், ஆசிரியர் பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆசிரியர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி உள்ள சூழலில் அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் கல்வித்துறை உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

First published:

Tags: Local News, Namakkal