Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்!

நாமக்கல்

நாமக்கல்

Namakkal District : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை மற்றும் சோழசிராமணி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அந்தந்த துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்களின் மேல் இருக்கும் செடி, கொடிகள், மரக்கிளைகள் மோதி இருக்கிறதா, மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கபட்டு வருகிறது. இதனிடையே இன்று ஒரு சில துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

    அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை மற்றும் சோழசிராமணி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று (ஜூலை 7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கபிலர்மலை துணை மின்நிலையத்தில் இன்று (ஜூலை 6ம் தேதி புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துபாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

    இதேபோல், சோழசிராமணி துணை மின்நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. எனவே சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal, Power cut

    அடுத்த செய்தி