Home /namakkal /

Namakkal | நாமக்கலில் மின்வாரியத்தின் மக்கள் குறைதீர் கூட்டம்- உங்கள் பகுதியில் எப்போது? தெரிந்துகொள்ளுங்கள்

Namakkal | நாமக்கலில் மின்வாரியத்தின் மக்கள் குறைதீர் கூட்டம்- உங்கள் பகுதியில் எப்போது? தெரிந்துகொள்ளுங்கள்

நாமக்கல் மின்வாரியம்

நாமக்கல் மின்வாரியம்

Namakkal News | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மாதம்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதால், மக்கள் மின்குறைபாடுகள் குறித்து பிரச்சினைகள் நேரடியாக தெரிவிக்கலாம்.

நாமக்கல் மாவட்ட மின்பகிர்மான குறைதீர்க்கும் கூட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய மின்சாரம் சார்ந்த குறைகள் தெரிவித்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மாதம்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதால், மக்கள் மின்குறைபாடுகள் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தெரிவிக்கலாம். தற்போது ஜூலை மாதத்திற்கான தேதிகள் மற்றும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பில் மாதம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலங்களில் நடைபெறும். பொதுமக்களை நேரிடையாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று மக்கள் குறைகள் தீர்க்கப்படுகிறது. தற்போது இந்த மாதத்திற்கான கூட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகள் தெரிவிக்கலாம்.

நாமக்கல் மின் பகிர்மான வட்டம், அந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட இடங்கள் மற்றும் தேதிகள்:

முதலாவது புதன்கிழமை 06.07.2022 அன்று நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. இதேபோல் இரண்டாவது புதன்கிழமை 13.06.2022 பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

மேலும் மூன்றாவது புதன்கிழமை 20.07.2022 திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாலை 3 மணியளவிலும், நான்காவது புதன்கிழமை 27.07.2022 அன்று ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மாலை 3 மணியளவில் நடைபெற இருப்பதால் அந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி