Home /namakkal /

Namakkal | கந்தம்பாளையம், மணியனூர்... நாமக்கல்லில் நாளைய மின்தடைப் பகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

Namakkal | கந்தம்பாளையம், மணியனூர்... நாமக்கல்லில் நாளைய மின்தடைப் பகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

நாமக்கல் மின்தடைப் பகுதிகள்

நாமக்கல் மின்தடைப் பகுதிகள்

Namakkal | நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்வழித் தடங்களில் மின்சாரத்தை அனுப்பும் டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி, மின் கம்பம், மின் கம்பி உள்ளிட்ட சாதனங்களின் உதவியுடன் வினியோகம் செய்யப்படுகிறது. இவற்றில் எந்தநேரமும் மின்சாரம் சென்று கொண்டு இருப்பதால் அவற்றில் அதிக வெப்பம் நிறைந்து இருக்கும். இதனால் மின் கம்பங்கள் மற்றும் மின் சாதனங்கள் சரியாக இருக்கிறதா? மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா? என்று சரிபார்க்கும் வகையில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதனால் ஒவ்வொரு மாதமும் அந்தந்த துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் தடை செய்யப்பட்டு மின் ஊழியர்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வார்கள்.

    அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பரமத்தி வேலூர் அருகே உள்ள நல்லூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்க வுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி