முகப்பு /நாமக்கல் /

புலம்பெயர் தொழிலாளர்களின் அச்சத்தை போக்கிய நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர்

புலம்பெயர் தொழிலாளர்களின் அச்சத்தை போக்கிய நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர்

X
புலம்பெயர்

புலம்பெயர் தொழிலாளர்கள்

Namakkal News | நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக காவல் துறையை அணுக வேண்டும் என நாமக்கல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். மேலும் நாமக்கல்லில் உள்ள கோழி பண்ணைகள், நூற்பாலைகள், போர்வெல் வண்டிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் போலியான வீடியோவால் பல வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர். இதனால் பல தொழில் நிறுவனங்கள் நடத்த முடியாத சூழல் நிலவியது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி வீடியோ குறித்தும், வடமாநில தொழிலாளர்களின் பயத்தை போக்கும் விதமாக நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் சேலம் சாலையில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களின் பயத்தை போக்கும் வகையில், நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார் வடமாநில தொழிலாளிகளுடன் கலந்துரையாடினார்.

இதையும் படிங்க : கொல்லி மலைக்கு ட்ரெக்கிங் போக ப்ளானா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

அப்போது அவர்கள் பேசுகையில், “வடமாநில தொழிலாளர் குறித்து பரவி வரும் வீடியோ முற்றிலும் பொய்யானது, அதை யாரும் நம்ப வேண்டாம். இங்கு பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் தக்க பாதுகாப்பு வழங்கும். யாரும் அச்சமடைய தேவையில்லை. ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக காவல் துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உங்களுக்கு தக்க உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்க எந்த நேரமும் தயாராக உள்ளோம்” என தெரிவித்தனர். மேலும் அப்போது தொழிலாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு போலீசார் பதிலளித்து பேசினர்.

First published:

Tags: Local News, Namakkal