ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் விவசாயிகளே பயன்படுத்தி கொள்ளுங்கள்..! பட்டா மாறுதலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.!

நாமக்கல் விவசாயிகளே பயன்படுத்தி கொள்ளுங்கள்..! பட்டா மாறுதலுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.!

நாமக்கல்

நாமக்கல்

Namakkal People Can Apply For Change Of Lease Through Online | நாமக்கல் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் இனிமேல் பட்டா மாறுதல்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இனிமேல் ஆன்லைன் வாயிலாக தமிழ்நிலம் இணையதளத்தில்  விண்ணப்பித்து, பயனடையலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் இனிமேல் பட்டா மாறுதல்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இனிமேல் ஆன்லைன் வாயிலாக தமிழ்நிலம் இணையதளத்தில் விண்ணப்பித்து, பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இதையும் படிங்க ; 30ம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் - நாமக்கல் கலெக்டர் உத்தரவு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளை சேர்த்த விவசாயிகள் பட்டா மாறுதலுக்கு தமிழ்நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார். அதன்படி பட்டா மாறுதலுக்கு வட்டாட்சியர் அலுவலகம் அல்லது இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டியதில்லை.

முன்னதாக நிலம் எங்கிருக்கிறதோ அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.

எங்கிருந்தும், எந்நேரமும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். விடுமுறை நாள்களிலும் விண்ணப்பிக்கலாம். பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு, செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

இதையும் படிங்க ; பிரம்மிப்பூட்டும் நாமக்கல் கோட்டையின் சிறப்பு வரலாறு தெரியுமா?

கட்டணம் செலுத்தப்பட்ட தும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைக்கு விண்ணப்பங்கள் பட்டியலிடப்படும். பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உத்தரவின் நகல், பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இணையத்திலேயே கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு  அதில் கூறியுள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த ஆன்லைன் வசதியால் மக்கள் பெரும்பாலும் இனிமேல் அலை வேண்டிய சூழ்நிலை இருக்காது. மேலும் உடனடியாகவும் பட்டா மாறுதல்களையும் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal